Homeசமூகம்இரண்டு மாதங்களில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன்! அமைச்சர் சிவகுமார்

இரண்டு மாதங்களில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன்! அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர், பிப். 23-
அமைச்சராகப் பொறுப்பற்ற இரண்டரை மாதங்களில் நிறைய பாடங்களைத் தாம்  கற்றுக் கொண்டிருப்பதாக மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

மனித வள அமைச்சருடனான கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின்  கலந்துரையாடல் நிகழ்ச்சி  நேற்று இங்குள்ள ரோயல்  லேக் கிளப்பில் நடைபெற்றது.

“மனித வள அமைச்சராகப்  பொறுப்பேற்று இரண்டரை மாதங்கள் தான் ஆகின்றன. அதனால் இந்த  நேரடி கேள்வி பதில் கூட்டத்திற்குப்  போக வேண்டாம்.அப்படிப் போனால் பல கேள்விகள் எழுப்பப்படும். அது உங்களுக்கு பிரச்சனைதான் என்று பலர் எனக்கு அறிவுரை கூறினார்கள்.
அப்படிப் போனால் பல கேள்விகள் எழுப்பப்படும். அது உங்களுக்கு பிரச்சனைதான் என்று பலர் எனக்கு அறிவுரை கூறினார்கள” என்றார் சிவகுமார்.

“இந்தக் கூட்டத்திற்குச் சென்றால்தான் இந்திய வர்த்தகர்களின் பிரச்சனைகளை என்னால் கண்டறிய முடியும்.நான் தனியாக போனால் தான் பிரச்சனை. அதனால்தான் மனிதவள அமைச்சின் கீழ் உள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் இங்கு வந்துள்ளேன்” என்றார் அமைச்சர்.

எனக்குத் தெரிந்த பதில்களை நான் தருகிறேன். தெரியாததை என் அதிகாரிகள் தருவார்கள்.

எது எப்படி இருந்தாலும் இந்திய வர்த்தகர்களின் பிரச்னைகளை என்னென்ன என்பதை கண்டறிந்து அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கமாக உள்ளது என்று சிவகுமார் கூறினார்.

நாட்டில் நிலவி வரும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்குத்  தீர்வு காண ஒற்றுமை அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில்தான் ஐந்து முக்கிய தொழில்துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி மூன்று நாட்களில் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

spot_img

latest articles

explore more