Homeசமூகம்அந்நிய தொழிலாளர்கள் இன்றி தவிக்கும் தொழில்துறைகளுக்கு உதவுவீர்! - நிவாஸ் ராகவன்

அந்நிய தொழிலாளர்கள் இன்றி தவிக்கும் தொழில்துறைகளுக்கு உதவுவீர்! – நிவாஸ் ராகவன்

கோலாலம்பூர், பிப். 23-
அந்நியத் தொழிலாளர்கள் இன்றி இந்திய தொழில் துறைகள்  பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருவதாகவும் 
இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தை  கோலாலம்பூர் மற்றும்  சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சங்கத்தின்  தலைவர் நிவாஸ் ராகவன்  கேட்டுக் கொண்டார் .

ஜவுளி, முடித் திருத்துதல், நகை வியாபாரம் ஆகிய இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களைக் கொண்டு வரும்  நடவடிக்கை தற்போது முடக்கப்பட்டிருப்பதை  நிவாஸ் சுட்டிக் காட்டினார். 

ஒட்டு மொத்தத்தில்  வர்த்தக துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனிதவள அமைச்சர் சிவகுமாரின்  கவனத்திற்குக் கொண்டு செல்லும் பொருட்டு  கோலாலம்பூர் மற்றும்  சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சங்கம்   கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது .

தமது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின்  அதிகாரிகளோடு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அமைச்சர் சிவகுமார் வர்த்தகர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார்.

வர்த்தகர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு அமைச்சரும் அவரின் அதிகாரிகளும் தக்க பதில்களை அளித்தனர்.

எந்தவொரு பிரச்சனை குறித்தும் வர்த்தக சமூகத்தினர் தெளிவு பெறுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் பயனான இந்த நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிவாஸ் ராகவன் மற்றும் செயற்குழுவினரை அமைச்சர் வெகுவாகப்  பாராட்டினார்.

மனித வள அமைச்சு மற்றும் இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து மக்கள் தெரிந்து கொள்வதற்கு இந்நிகழ்ச்சி நல்ல வாய்ப்பாக அமைந்ததாக சிவகுமார் குறிப்பிட்டார்.

அதே சமயம், மக்களுக்கும் அமைச்சுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வகை செய்யும் என்றார்.

ஆகையால், இது போன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை சங்கம்   இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்று அமைச்சர்  கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more