தொழிலாளர்களுக்கு வங்கி மூலம் சம்பளம்:முதலாளிகளிடையே விண்ணப்பங்கள் அதிகரிப்பு!அமைச்சர் சிவகுமார் தகவல்

98

ஈப்போ செப் 14-
தனியார் துறை முதலாளிகள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என அரசாங்கம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட முதலாளிமார்கள் மனிதவள இலாகாவில் விண்ணப்பங்கள் செய்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

எடுத்துக்காட்டாக, மனிதவள துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள்படி மனிதவள துறை அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும் முதலாளிகளின் எண்ணிக்கை குறிப்பாக தோட்டங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்றார் அவர்.

தொலைதூரப் பகுதிகளில் வங்கிக்குச் செல்வதில் சிரமம் மற்றும் அருகில் வங்கி இல்லாதது போன்ற பிரச்சனைகளை இவர்கள் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தொலைதூரப் பகுதி முதலாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முதலாளிகள் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுவதாக நேற்று பேராக் மாநிலத்தில் உள்ள மனித வள துறை அலுவலகத்திற்கு வருகை புரிந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

.