மலேசியாவில் மறுமலர்ச்சியைக் காப்போம்!-என்றி லாய்

39

வங்சா மாஜூ, செப்.16-

மலேசிய மக்களைப் பொறுத்தவரை செப்டம்பர் 16 ஒரு முக்கிய நாள். 60  ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சில மாநிலங்களோடு சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் மலேசியா.

இந்த ஆண்டு முதன் முறையாக மலேசியா  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிர்வாகத்தின் கீழ் மலேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி தொடங்கப்பட்டது  செப்டம்பர்  மாதமே. இந்த மாதத்தில்தான் புதிய அரசியல் கட்சியான . பார்ட்டி கெஅடிலான் நேஷனல்  (பின்னர் பார்ட்டி கெஅடிலான் ராக்யாட்டாக மாற்றம் கண்டது) உருவானது.

24 ஆண்டுகளுக்குப் பின்னர் மறுமலர்ச்சி இயக்கம் நல்ல பலன்களைக் கொடுத்துள்ளதைக் காண முடிகிறது. மலேசிய அரசாங்கத்தின் ஒவ்வொரு நிர்வாகப் பிரிவிலும்  இன்று மறுமலர்ச்சி சிந்தனை ஊடுருவியிருப்பதைக் காணலாம். இந்த  மறுமலர்ச்சி இயக்கத்தின் பலனாக  பல அரசியல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்  உருவானதுதான் பலமிக்க மலேசிய மடானி ஒற்றுமை அரசாங்கம்.

 மறுமலர்ச்சி, மக்கள் குரல் என்ற சுலோகங்களை நான் கேட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன. இந்த சுலோகங்களே கடந்த 20 ஆண்டுகளாக நம்மோடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடனும் சேர்ந்து பயணித்து வந்தன. இன்றைய இந்த வெற்றிக்கு இதுவே காரணம் ஆகும். இந்த சுலோகங்கள் பற்றி அண்மையில் நடைபெற்ற  கெஅடிலான் வாங்சா மாஜூ டிவிஷன் ஆண்டுக்  கூட்டத்தில் உரையாற்றும்போது  நான் பல முறை  வலியுறுத்தியிருக்கிறேன். இம்முறை பிரதமராக இருப்பவர் கெஅடிலானைச் சேர்ந்தவர் என்று உறுப்பினர்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது .

அரசியல் வாழ்க்கை என்பது பல சாத்தியங்கள் நிறைந்தது என்பதை எனது அரசியல்  வழிகாட்டி என்னிடம் கூறியிருக்கிறார்.வலுவான மறுமலர்ச்சி சிந்தனை இருந்தால் மட்டுமே நாட்டின் ஒற்றுமைக்குத் துணை நிற்காத தீவிரவாத தன்மையிலான சவால்களை நம்மால் முறியடிக்க முடியும்.

மறுமலர்ச்சி என்பது வெறும் சுலோகனாக மட்டும் இருந்துவிடக் கூடாது.  மக்கள் விரும்புவது   அர்த்தமுள்ள மற்றும் பயனளிக்கக்கூடிய  ஒரு மாற்றத்தையே.. கெஅடிலான் மறுமலர்ச்சி என்பது இன, சமய, ஆண், பெண் அல்லது பின்னணி பாராத  சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சாரம் மற்றும் சமய சமத்துவத்தைக் கோருவதாகும். 

அதே வேளையில் , துன்புறுத்தல், பதவி துஷ்பிரயோகம், ஊழல், பாகுபாடு,பயங்கரவாதம், சுரண்டல் போன்ற செயல்களைப் புறக்கணிப்பதே கெஅடிலான் மறுமலர்ச்சி ஆகும். இது போன்ற செயல்கள் மலேசிய மக்களின் நற்பெயருக்குக் களங்கத்தையே விளைவிக்கும். கெஅடிலான் மறுமலர்ச்சி என்பது ஜனநாயக கோட்பாடுகள்,  மனித உரிமைகள், சட்டதிட்டங்கள்  முதலியவற்றைக் கடைபிடித்து நாட்டின் நிர்வாகத்தில்  நேர்மை, நம்பகதன்மை, வெளிப்படைத்தன்மை முதலிய உயர்நெறிகளைக் கடைபிடிப்பதாகும். 

 “அனைவருக்கும் 2023 மலேசிய தின வாழ்த்துகள்”


-என்றி லாய்

தலைவர், கெஅடிலான் வங்சா மாஜூ டிவிஷன்  

உதவி தலைவர், கெஅடிலான் கூட்டரசு பிரதேசம்

ஆலோசனை வாரிய உறுப்பினர், டிபிகேஎல்–