ஐக்கியத்தை வலுப்படுத்துவோம்! – டாக்டர் குணராஜ் வாழ்த்து

30

கிள்ளான், செப்.16-

இன்று  செப்டம்பர் 16.மலேசிய தினம். இன்றைய தினத்தில் நம்மிடையே ஐக்கியத்தை மேலோங்கச் செய்து நாட்டில் அமைதியும் சுபிட்சமும் நீடித்திருக்கச் செய்வோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்  குணராஜ் ஜார்ஜ் தனது மலேசிய தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

 நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதே மலேசிய மடானி அரசாங்கத்தின் இலக்காகும் என்றார் அவர்.

பொருள்படிந்த இந்த நாளில் செந்தோசா சட்டமன்ற சேவைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொண்டூழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்த மலேசிய மக்களுக்கு மலேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கெஅடிலான்  கோத்தாராஜா டிவிஷன் தலைவருமான குணராஜ் அறிக்கை ஒன்றின் வழி கூறினார்.