3 தொழிற்துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்கள் : உடனடியாகப் பதிந்து கொள்வீர்! டோனி கிளிஃபெர்ட் வேண்டுகோள்

68

கோலாலம்பூர், செப்.16-

.இந்திய பாரம்பரிய தொழிற்துறைகளான நகைக் கடை, ஜவுளியகம் மற்றும் முடி திருத்தும் கடைகளுக்கு அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அமைச்சரவை இம்மாதம் 8 ஆம் தேதி அனுமதி அளித்ததாக மனித வள அமைச்சு அண்மையில் அறிவித்ததை  அனைவரும் அறிவர்.

இதன் அடிப்படையில்  அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவிருக்கும் சம்பந்தப்பட்ட துறைகள்  https://forms.gle/mDrPd4BXmxFmUwzb7  கூகள் பாரம் வாயிலாக உடனடியாக  விண்ணப்பம் செய்யும்படி கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வார்த்தக  தொழிலியல் சங்கம் கேட்டுக் கொண்டது.

இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் செப்டம்பர் 20 ஆம் தேதி ஆகும் என்று இச்சங்கத்தின் தலைமைச் செயலாளர் டோனி கிளிஃபெர்ட் தோமஸ் தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழிலாளர்கள்  தருவிப்பு  வெளிப்படையான மற்றும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுவதற்கு ஏதுவாக இந்த விவரங்கள் யாவும் மேற்குறிப்பிட்ட துறைகளைக்  கண்காணிக்கும்   உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு மற்றும் மனித வள அமைச்சு ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 இதன் பொருட்டு சம்பந்தப்பட்ட தொழிற்துறைகள் தங்களின் தேவையைத் துல்லிதமாகக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

 மேல் விவரங்களுக்கு   +60122561033 வழி வாட்ஸ்சாப் அல்லது   03-26931033 எனும் எண்ணில்  சங்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி 𝒆𝒎𝒂𝒊𝒍 𝒆𝒏𝒒𝒖𝒊𝒓𝒚@𝒌𝒍𝒔𝒊𝒄𝒄𝒊.𝒄𝒐𝒎.𝒎𝒚 என்பதாகும்.