கோலாலம்பூர், செப்.29-
வரும் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் கலைநிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை இன்று மதியம் 12.00 மணி தொடங்கி இணையம் வழி பொது மக்கள் வாங்கலாம்.
“டும் டும் டும் “எனும் தலைப்பிலான இந்த கலை நிகழ்ச்சி தலைநகர், புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவிருக்கிறது .
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை www.yessbossticket.com வாயிலாக பொது மக்கள் வாங்கலாம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். அவரோடு பின்னணி பாடகர் மனோ, மதுபாலகிருஷ்ணன் மற்றும் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இவர்களோடு தற்போதைய புகழ்பெற்ற பிரபல நடிகர், நடிகையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேல் விபரங்களுக்கு ‘YESBOSS ‘ சமூக ஊடகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.




