புத்ரா ஜெயா செப் 28-
கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் தங்கள் வேலைகளை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சு நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
வேலை தேடுதல் மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறையை எளிதாக்க இக்கண்காட்சி பெரிதும் உதவுகிறது.
வேலை வாய்ப்பு கண்காட்சி வழி
1 லட்சத்து 58 ஆயிரத்து 792 பேர் வேலையில் அமர்த்தப்பட்டனர்!
– அமைச்சர் சிவகுமார் பெருமிதம்
புத்ரா ஜெயா செப் 28-
கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் தங்கள் வேலைகளை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சு நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
வேலை தேடுதல் மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறையை எளிதாக்க இக்கண்காட்சி பெரிதும் உதவுகிறது.
மை ஃபியூட்சர் ஜோப் என்பது மலேசியாவின் அனைத்து வேலை தேடுபவர்கள் மற்றும் முதலாளிகளுக்கான தேசிய வேலை இணைய தளமாகும்.
வேலை தேடுவோரின் திறன்களின் அடிப்படையில் மை ஃபியூட்சர் ஜோப் மிகவும் துல்லியமான வேலைகளை பெற்றுத் தருகிறது.
சொக்சோ நிறுவனத்தின் மூலம் நாடு தழுவிய அளவில் 15 இடங்களில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு கண்காட்சியில் 1,670 நிறுவனங்கள் பங்கேற்று நேர்முக தேர்வுகளை நடத்தியது.
இதன் வாயிலாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 792 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
நாட்டில் வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வு காண மனித வள அமைச்சின் மை ஃபியூட்சர் ஜோப் மக்களுக்கு பெரிதும் உதவுகிறது என்று அவர் சொன்னார்.
.