ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > 100வது இலவச பேருந்து: சிலாங்கூர் அரசின் சாதனை!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

100வது இலவச பேருந்து: சிலாங்கூர் அரசின் சாதனை!

ஷா ஆலம், செப். 26-
சிலாங்கூர் அரசாங்கம் அம்மாநிலத்தில் தனது 100வது இலவச பேருந்தை ஓடவிட்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் வாயிலாக, மிக அதிகமான இலவச பேருந்துகளை மக்களுக்காக ஏற்படுத்தி தந்த மாநிலம் என்ற புகழையும் சாதனையையும் மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.

இலவச பேருந்து சேவைக்கு சுபாங் ஜெயா குடியிறுப்பாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் இந்த 100வது பேருந்து சுபாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் பகுதிகளில் சேவை வழங்கிவரும் என சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி தெரிவித்ததாக சிலாங்கூர் மாநில அரசின் தொலைக்காட்சியான டிவி சிலாங்கூர் தெரிவித்தது.

ஈராண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட இலவசப் பேருந்து சேவை சிலாங்கூர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் அது இப்போது மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றிருப்பதாகவும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரான டெங் சாங் கிம் கூறினார்.

மலேசியாவில் சிலாங்கூர் மட்டுமே இப்படிப்பட்ட சேவையை வழங்குகின்றது. ஆனால், நான் நினைக்கிறேன், உலகிலேயே மக்களுக்கு இலவசமாக பேருந்து சேவையை வழங்கிவரும் மாநிலம் சிலாங்கூராக மட்டும்தான் இருக்கும் என மந்திரி புசார் அஸ்மின் அலி கூறியதாக டெங் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன