spot_img
16.4 C
London
spot_img
Home சமூகம் நம்பிக்கை நட்சத்திர விருது:சிறந்த நிழற்பட கலைஞராக பி. மலையாண்டி தேர்வு!

நம்பிக்கை நட்சத்திர விருது:சிறந்த நிழற்பட கலைஞராக பி. மலையாண்டி தேர்வு!

0
205

கோலாலம்பூர், அக்.28-

நம்பிக்கை குழுமம் இரண்டாவது ஆண்டாக  ஏற்பாடு செய்த  நட்சத்திர விருது விழாவில் சிறந்த நிழற்பட கலைஞருக்கான விருதை தமிழ்ப்பத்திரிகையின்  மூத்த புகைப்பட கலைஞரான பி. மலையாண்டி தட்டிச் சென்றார்.

40 ஆண்டு கால அனுபவத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் நடைபெற்ற மாநாடுகள், விளையாட்டுப் போட்டிகள் என தனது புகைப்பட திறமைகளை வெளிக்கொணர்ந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார் மலையாண்டி.

இவரின் புகைப்பட திறமையை அங்கீகரிக்கும் வகையில் நேற்று தலைநகரில் நடைபெற்ற நம்பிக்கை குழுமத்தின் ஏற்பாட்டிலான  நட்சத்திர  விருதளிப்பு நிகழ்ச்சியில் இவர் சிறந்த நிழற்பட கலைஞர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

மனித வள அமைச்சர் வ.சிவகுமார் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி இவரை கௌரவித்தார்.