பேராக் மஇகா இளைஞர் பிரிவு பேராளர் மாநாடு சீரிய முறையில் ஏற்பாடு! – அண்ட்ரூ டேவிட் புகழாரம்

220

ஈப்போ, அக்.29-

பேராக் மஇகா இளைஞர்  பிரிவின்  35 ஆவது  பேராளர் மாநாடு மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக  மஇகா இளைஞர்  பிரிவு தேசிய துணைத் தலைவர் அண்ட்ரூ டேவிட் புகழாரம் சூட்டினார்.

இங்குள்ள பிபிஎஸ்எம் மண்டபத்தில்  மஇகா பேரா மாநில துணைத் தலைவர் ஜெயகோபியால்  அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட இம்மாநாடு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது பெருமை அளிப்பதாக அவர் சொன்னார்.

“இப்பேராளர் மாநாட்டில் மஇகா இளைஞர்  பிரிவு தேசிய  தலைவர்  ரவீன் குமாரின் பிரதிநிதியாக நான்  கலந்து கொள்கிறேன்.அவரின் வேண்டுகோளை இந்த மாநாட்டில்  முன் வைத்துள்ளேன்” என்றார்.

“இப்பேராளர் மாநாட்டில் என்னோடு மஇகா இளைஞர்  பிரிவு தேசிய செயலாளரும் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான அர்விந்த் கிருஷ்ணன், மஇகா மத்திய செயலவை உறுப்பினர் கேசவன் கந்தசாமி, தியாகேஷ் கணேசன் , மஇகா இளைஞர்  பிரிவு தேசிய தகவல் பிரிவு தலைவர் 

அர்விந்த் தனபாலன், ஏ. மோகன்,மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சதீஷ் கோபால் மற்றும் மஇகா  தேசிய புத்ரா தலைவர் டாக்டர் ஏ. கிஷ்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்” என்றார்.

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் வீரன், மாநில மஇகா செயலாளர் சண்முகம், ஜெயகணேஷ் மற்றும் ஸ்ரீ முருகன் போன்ற மூத்த தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

சிறப்பு வருகை புரிந்த துணைப் பிரதமரின்  இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி மற்றும் பேரா மணிமன்ற தலைவர் ஜோன் கென்னடி ஆகிய இருவருக்கும் அண்ட்ரூ டேவிட் நன்றி தெரிவித்துக் கொண்டார்.