spot_img
11 C
London
spot_img
Home சமூகம் தண்ணீர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவீர்! -சார்ல்ஸ் சந்தியாகோ

தண்ணீர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவீர்! -சார்ல்ஸ் சந்தியாகோ

0
257

கோலாலம்பூர், நவ.3-
நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றாக தண்ணீர் விவகாரத்திற்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர், சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.
பருவநிலை மாற்றம் நிலையற்றதாக இருப்பதால் அதை எதிர்கொள்ள இவ்விவகாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சபா, கிளந்தான், லாபுவான் ஆகிய 3 மாநிலங்களுக்கான கட்டமைப்பு மேம்பாட்டிற்கு 2024 பட்ஜெட்டில் வெ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 5 கடற்படைக் கப்பல்களுக்கான நிர்மாணிப்பு செலவு வெ.1,190 கோடியை எட்டி விட்டது.

ஒருவேளை தண்ணீர் துறைக்கு இந்த வெ.1,190 கோடியும் கிடைத்து விட்டால் வருமானம் இல்லாத குடிநீரைக் குறைத்து மீட்டெடுக்கப்பட்ட நீரின் பயன்பாடு, ஆறுகளைச் சுத்தப்படுத்துதல், இதர தண்ணீர் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றைச் செயல்படுத்தலாம் என்று ‘என்சேர்ச்’ நிறுவனத்தின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்

-மலேசியா கினி