வாங்சா மாஜூ, நவ.4-விரைவில் கொண்டாடப்படும் தீபத் திருநாளையொட்டி கெஅடிலான் வாங்சா மாஜூ டிவிஷன் பொறுப்பாளர்கள் பலகார வகைகளைத் தயார் செய்து அவற்றை சமுக இல்லங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தொகுதியின் நிர்வாக செயலாளர் மனோஜ் தலைமையில் இந்த பலகார பொட்டலங்கள் சமூக இல்லங்களுக்கு விநியோகிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு பெருநாளின்போதும் பல்லின தன்மை காணப்படுவதாகவும் அவ்வகையில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட தீபாவளித் திருநாளில் சமூக இல்லங்களைச் சேர்ந்தவர்களையும் அரவணைப்பது உன்னதமான செயல் என்று கெஅடிலான் வாங்சா மாஜூ டிவிஷன் தலைவர் என்றி லாய் கூறினார்.”

எந்தவொரு நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்தாலும் அதில் பல்லின தன்மை காணப்படுவதை உறுதிப்படுத்துவோம்.அவ்வகையில் மலேசியாவில் பல்லின மக்களின் பெருநாட்கள் கொண்டாடப்படும்போது நாங்கள் அனைவரும் அவர்களுடன் இணைந்து அத்திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்” என்றார் என்றி லாய்.