இந்தியர் சமூக மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பீர்! -டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்து

130

கிள்ளான், நவ.17-
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்குக் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி மலேசியாவில் அவை மிகச் சிறந்த நிலையிலான கல்வியை வழங்குவதை மாநில அரசு உறுதிச் செய்ய வகை செய்ய வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.

மாநில பட்ஜெட்டில் இவ்விவகாரம் தொடர்பில் குறிப்பிடப்படா விட்டாலும் இதற்கானத் திட்டத்தை மாநில அரசு கொண்டிருக்கும் என்று செந்தோசா சட்டமன்றம் நம்பிக்கை கொண்டுள்ளது.

‘இந்த வேளையில் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் செல்ல பி40 மற்றும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வசதியை ஏற்படுத்தும் வகையில் அங்கு தங்கும் விடுதியை அமைத்த மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களுக்கு இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.

இது மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாகும். இதனைத் தொடர்ந்து உலு சிலாங்கூரிலும் ஒன்றைச் செயல்படுத்த வேண்டும்.

அதோடு மட்டுமின்றி இந்திய சமூகத்தை மேம்படுத்த சித்தம் மற்றும் இடப்பெயர்வு சம்பந்தப்பட்ட தொழில்முனைவர் துறைகளில் உள்ள திட்டங்களை மாநில அரசு மறு மதிப்பீடு செய்வதற்கான தருணம் வந்து விட்டது.

இத்திட்டத்தை மேற்கொண்ட கால கட்டம் முழுவதும் தனது இலக்கை மாநில அரசு அடைந்து விட்டது.

இதில் பி40 மற்றும் வறிய நிலையிலுள்ள இந்தியர்கள் அதிலிருந்து விடுவதை உறுதிப்படுத்த மிகவும் முழுமையான மற்றும் தேவைகளைப் பூர்த்திச் செய்யக்கூடிய ஒரு புதிய திட்டத்தை வரும் 2024ஆம் ஆண்டில் செந்தோசா சட்டமன்றத் தொகுதி பரிந்துரைக்கிறது.

சிலாங்கூர் மாநில மந்திரி புசாரால் தாக்கல் செய்யப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்க வாய்ப்புகளை வழங்கியதற்காக இந்த வேளையில் அவைத் தலைவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் அவர்.