தமிழ், சீன மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை தற்காலிகமானது -பாட்லினா சீடேக்

36

பெட்டாலிங் ஜெயா, நவ.17-

தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தற்காலிகமான ஒன்று என்பதால் அதற்குத் தீர்வு காணப்படும் என்று கல்வி அமைச்சர், பாட்லினா சீடேக் தெரிவித்தார்.

இதில் ஒவ்வொரு பங்குதாரரின் வருத்தத்திற்கும் நியாயமான முறையில் தீர்வு காணப்படுவதை உறுதிச் செய்யத் தமிழ், சீனப்பள்ளி நிர்வாகத்தினருடன் இவ்வாண்டுக்கான இலக்குகள் தொடர்பில் அமைச்சு கலந்துரையாடலை நடத்தி விட்டது.

அந்த வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் சீன மொழி விருப்ப ஆசிரியரைக் குறிக்கும் செயல்முறை வாயிலாக விருப்ப பதிவு சரிபார்ப்பு நடவடிக்கை அமைச்சு மேற்கொண்டு விட்டது.

ஒவ்வொரு செயல்முறையிலும் சரிபார்க்கப்பட்டத் தரவின் அடிப்படையில் மற்றும் முக்கியத் தரப்புகளையும் உட்படுத்தியதன் வழி ஆசிரியருக்கானக் கணிப்பு மிகக் கவனமாக மேற்கொள்ளப்பட்டது என்று ஓர் அறிக்கையில் நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்லினா சீடேக் குறிப்பிட்டார்.