பணக்காரர்கள் நாட்டிற்காக அதிக பங்களிப்பை வழங்கலாம்! -துணை நிதி அமைச்சர் பரிந்துரை

36

பெட்டாலிங் ஜெயா, நவ.21-

  சொகுசுப் பொருட்களுக்கான வரியை அரசு அறிமுகப்படுத்துவதைத் தற்காத்துப் பேசிய துணை நிதி அமைச்சர், ஸ்டீவன் சிம் சீ கியோங் இந்நாட்டில் செல்வாக்குப் பெற்ற அனைத்துப் பணக்காரர்களும் நாட்டிற்கு மீண்டும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  ஒருவேளை இந்நாட்டில் நீங்கள் செலவாக்கைப் பெற்றிருந்தால், கைப்பை வாங்க 20,000 வெள்ளி, கைக்கடிகாரம் வாங்க 50,000 வெள்ளி உங்களால் செலவழிக்க முடிந்தால் நாட்டிற்கும் நீங்கள் சற்று பங்களிப்பு செய்யலாம்  என்று பத்திரிகையாளர்களிடம் பேசிய போது புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவன் குறிப்பிட்டார்.

   முன்னதாக தனது அடிப்படை வருமானத்தை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் 5 முதல் 10 விழுக்காடு வரை சொகுசுப் பொருட்களுக்கான வரியை அறிமுகம் செய்ததில் அரசு விமர்சிக்கப்பட்டது. இதில் பல வணிகர்களுக்குப் பெரிய நட்டம் ஏற்படவிருக்கிறது என்று மலேசிய இந்திய நகை வியாபாரிகள் சங்கம் உட்பட பல சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தன.