திறன் மேம்பாட்டு நிதிக் கழக வாரிய இயக்குநர்களாக டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலம் – மோ ஷூன் ஜோங் நியமனம்

49

புத்ரா ஜெயா, டிச 4-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் (பிடிபிகே) புதிய வாரிய இயக்குநர்களாக பைனரி பல்கலைக்கழகத்தின் தோற்றுநரும் நிர்வாக தலைவருமான டான்ஸ்ரீ டத்தோ ஜோசப் அடைக்கலம் மற்றும் காஜாங் நியூ எரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மோ ஷூன் ஜோங் ஆகியோர் இன்று நிமயனம் செய்யப்பட்டனர் .

இன்று அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக மனிதவள அமைச்சுக்கு வருகை புரிந்த இருவரும், பின்னர் அமைச்சரிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கல்வி துறையைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள், திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் இணைவது உள்நாட்டு தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் செயல்திறனை வலுப்படுத்த உதவும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இதன் மூலம் அதிகமான உள்ளூர் மக்களுக்கு உதவுவதோடு மாணவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியைப் பெறுவதற்கும் வழி வகுக்கும் என்றார்.