அமைச்சர் சிவகுமாருக்கு இளைஞர் படை பக்க பலமாக இருக்கும்! மணிமன்றத் தலைவர் ராஜா முருகன் அறிவிப்பு

58

கோலாலம்பூர் டிச 4-
இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மனிதவள அமைச்சர் சிவகுமார் மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களுக்கும் இளைஞர்கள் படை பக்கப் பலமாக இருக்கும் என்று மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தேசிய தலைவர் ராஜா முருகன் மணியம் தெரிவித்தார்.

அமைச்சர் சிவகுமார் அமைதியான முறையில் மக்களுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் சேவையாற்றி வருகிறார்.

தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் கட்டடம் கடனில் தத்தளித்த போது 50,000 வெள்ளியை வழங்கி காப்பாற்றினார்.

2024 ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் மேலும் 50,000 வெள்ளியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த வேளையில் அமைச்சர் சிவகுமாருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அவர்.

மனிதவள அமைச்சு மேற்கொள்ளும் தொழில் திறன் கல்வி திட்டங்களிலும் அதிகமான இந்திய இளைஞர்கள் பங்கேற்க நாங்கள் ஏற்பாடுகளைச் செய்வோம்.

தொழில் திறன் கல்வியை பயிலும் மாணவர்களுக்கு வருங்காலத்தில் சிறப்பான எதிர் காலம் காத்திருக்கிறது என்று அமைச்சர் சிவகுமார் கூறி வருகிறார்.

மனிதவள அமைச்சுகளுடன் இணைந்து மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றம் தொழில் திறன் கல்வியை இந்தியர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் என்று அவர் சொன்னார்.

நேற்று மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் 53 ஆவது தேசிய பேராளர் மாநாட்டை அமைச்சர் சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது