spot_img
16 C
London
spot_img
Home சமூகம் 1,200 பேருக்கு உதவி பொருட்கள்! சிலாங்கூர் & கோலாலம்பூர் சமூகநல சங்கம் வழங்கியது

1,200 பேருக்கு உதவி பொருட்கள்! சிலாங்கூர் & கோலாலம்பூர் சமூகநல சங்கம் வழங்கியது

0
246

பூச்சோங், டிச. 18-


சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் சமூகநல சங்கத்தின் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு உபகரண பொருட்களும் பொது மக்களுக்கு உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.

இங்குள்ள பொது மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 600 மாணவர்கள் புத்தக பைகள், காலணிகள் மற்றும் பள்ளி உபகரணங்களைப் பெற்றுக் கொண்ட வேளையில் 600 பேர் அரிசி, பால் மாவு, பிஸ்கட் போன்ற உணவு பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.

தாங்கள் கடந்த 14 ஆண்டுகளாக இச்சேவையில் ஈடுபட்டு வருவதாக இச்சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜோன் ராஜ் குறிப்பிட்டார்.

சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்ச்சி வழி பயனடைந்ததாக அவர் சொன்னார்.

அதே வேளையில், சுங்கை பீசி பிபிஆர், லெம்பா சுபாங், பூச்சோங் இண்டா போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு சன்வே பல்கலைக்கழகம் மற்றும் ஐஜிபி பெர்ஹாட் ஒத்துழைப்பு நல்கியதாக அவர் மேலும் சொன்னார் .