spot_img
16 C
London
spot_img
Home சமூகம் ஜே-கோம்: அரசு முயற்சிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், பொய்ச் செய்திகளை தடுக்கவும் உதவும் –...

ஜே-கோம்: அரசு முயற்சிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், பொய்ச் செய்திகளை தடுக்கவும் உதவும் – தியோ நீ சிங்

0
201

கூச்சிங், டிச. 20-
தொடர்பு அமைச்சின் கீழ் தற்போது செயல்படும் சமூக தொடர்பு துறை அல்லது ஜே-கோம் (J-KOM), அரசாங்க முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், தவறான செய்திகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராடுவதற்குமான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்.

மக்களுக்கு பலன் கொடுக்கும் அரசாங்க திட்டங்கள், உதாரணமாக மடானி மருத்துவ திட்டம் போன்ற நல்ல முயற்சிகள் மேலும் ஜே-கோம் வழி கொண்டு சேர்க்கப்படும் என தொடர்பு துறை துணை சிங் அமைச்சர் தியோ நீ சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த மடானி மருத்துவ திட்டத்தின் கீழ் சிறிய நோய்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலவச சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்கியுள்ளோம். இது நல்ல ஒரு பலன் கொடுக்கும் திட்டம். இருப்பினும், இந்த முயற்சியைப் பற்றி தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்”.

“மற்ற அமைச்சுகளின் திட்டங்களையும், அதன் முன்முயற்சிகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதன் வழி, அதிகமான மக்கள் பயனடைவார்கள்,” என்று சரவாக், கூச்சிங்கில் தொடர்பு அமைச்சின் கீழ் செயல்படும் அரசாங்க துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலைந்துரையாடலுக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் துறையின் கீழ் இருந்த சமூக தொடர்பு துறை (ஜே-கோம்), இப்போது தொடர்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் உறுதிபடுத்தினார்.

நல்ல பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பது தவிர்த்து, தொடர்பு துறை சார்ந்த சிக்கல்களுக்கு பதிலளிப்பதும் இதில் முக்கியமானது என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ கூறினார்.

தவறான அறிக்கைகள் அல்லது தகவல்களை திறம்பட மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், சில பிரச்சினைகள் பல நாட்கள் கவனிக்கப்படாமல் இருப்பதோடு, தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்றார்.