spot_img
14.5 C
London
spot_img
Home சமூகம் அனைவருக்கும் சுய கட்டுப்பாடு அவசியம்! -டத்தோ சிவநேசன் வலியுறுத்து

அனைவருக்கும் சுய கட்டுப்பாடு அவசியம்! -டத்தோ சிவநேசன் வலியுறுத்து

0
281

ஈப்போ, டிச.21-

   நாட்டில் கோவிட் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இந்தப் பள்ளி விடுமுறை காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பேரா மாநில மனித வள, சுகாதார, இந்திய சமூக விவகார மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு செயற்குழுத் தலைவர் டத்தோ சிவநேசன் வலியுறுத்தினார். 

   இந்த வாரத்திலிருந்து தொடங்கவிருக்கும் பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பெருநாளில் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

   பேரா மாநிலத்தில் இதுவரை 600 தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அவ்வளவு மோசமானதாக இல்லை. இதில் மரண எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால் இந்நிலையைத் தொடர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் தற்போது கோவிட் நோயாளிகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டன என்று பேராவில் பிறந்தவர்களுக்கான ஊக்குவிப்பு மையம் ஏற்பாட்டிலான பேரா செய்தியாளர்கள் ஊக்குவிப்புத் திட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது சிவநேசன் குறிப்பிட்டார்.

  இதன் அடிப்படையில் சமூகத்தில் தொற்று பரவாமல் இருக்க சுய கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். இதில் தொற்று கண்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

   முன்னதாகக் கடந்த 10 முதல் 16ஆம் தேதி வரை நாடு முழுவதும் 20,696 கோவிட் தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக புத்ராஜெயாவில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றச் செய்தியாளர்கள் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.     

-மலேசியா கினி