spot_img
13 C
London
spot_img
Home ஆன்மீகம் செந்தூல் ஸ்ரீ சக்தி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா

செந்தூல் ஸ்ரீ சக்தி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா

0
764

கோலாலம்பூர், டிச.24-


தலைநகர் , செந்தூல் ஸ்ரீ சக்தி துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

1008 சங்காபிஷேகத்துடன் கூடிய இந்த ஆலயத்தின் 74ஆம் ஆண்டு திருவிழாவிற்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் சிறப்பு வருகை புரிந்தார்.

இந்தத் திருவிழாவையொட்டி காலை 8.00 மணிக்கு பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை, விசேஷ ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கும் மூல மூர்த்திகளுக்கும் திரவியாபிஷேகம் நடைபெற்றது.

நண்பகல் 12.00 மணிக்கு மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.