கவிமாறனின் பக்திப் பாடல்கள் வெளியீடு!

409

கோலாலம்பூர், ஜன.26-

இவ்வாண்டு தைப்பூச திருவிழாவையொட்டி கவிமாறன் இரண்டு பக்திப் பாடல்களை வெளியிட்டுள்ளார்.

முதலாவது பாடல் கவிமாறன் தயாரிப்பிலான ‘தங்க முருகன்’. இப்பாடலின் பாதி வரிகளை இவரே எழுதி பாடியுள்ளார். இணை வரிகள் மற்றும் இசை கலைமாமணி டாக்டர் மணி பாரதி.

இப்பாடலின் காணொளி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முகநூல் உட்பட அனைத்து சமூக ஊடகங்களிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கவிமாறன் கூறினார்.

அடுத்தப் பாடல் ‘வேலவா வா வா ‘ என்பதாகும். 6 நிமிட பாடலான இதனை குரு மண்டலம் வீரமணிதாசன் பாடியுள்ளார். தைப்பூச திருவிழாவில் காவடிகளோடு பக்திப் பரவசத்தை மக்கள் உணரும் வகையில் இப்பாடலுக்கு அழகுற இசையமைத்துள்ளார் வீரமணிதாசன். தயாரிப்பு கவிமாறன்.

இந்தப் பாடலின் காணொளி வரும் பிப்ரவரி 7ஆம் தேதி சமூக வலைத் தளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றார் அவர்.

இதற்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்படாது. இவ்விரு பாடல்களின் காணொளிகளைக் கண்டு முருகப் பெருமானின் சிந்தனையில் திளைத்திருக்கும்படி பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.