spot_img
10.4 C
London
spot_img
Home சமூகம் ரஹ்மா உதவி தொகை இன்று முதல் வழங்கப்படும்! -நிதி அமைச்சு

ரஹ்மா உதவி தொகை இன்று முதல் வழங்கப்படும்! -நிதி அமைச்சு

0
342

கோலாலம்பூர், ஜன.29-

   முதல் கட்ட ரஹ்மா உதவி தொகை (எஸ்.டி.ஆர்.) இன்று தொடங்கி 8.2 மில்லியன் பேருக்குக் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்தது.

  இத்தொகை எஸ்.டி.ஆர். தரவு தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கு அல்லது பேங்க் சிம்பானான் வங்கிக் கணக்கில் தகுதிக்கேற்ற பிரிவின்படி கட்டம் கட்டமாகச் செலுத்தப்படும்.

  முன்னதாக 300 வெள்ளியாக இருந்த 2,500 வெள்ளிக்கும் குறைந்த குடும்ப வருமானத்தைக் கொண்டிருப்பவர்களுக்கான உதவி தொகை முதல் கட்ட எஸ்.டி.ஆரில் 500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 இதே போல் 2,501 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளி வரை வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு 100 முதல் 300 வெள்ளி வரை வழங்கப்படுகிறது.

  இதில் வாழ்க்கைத் துணையற்ற முதியோருக்கு 150 வெள்ளி, திருமணமாகாதவர்களுக்கு 100 வெள்ளி வழங்கப்படும் என்று ஓர் அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.  

-பெர்னாமா