கோலாலம்பூர், ஜன.29-
ரஹ்மா உதவி தொகையை (எஸ்.டி.ஆர்.) இவ்வாண்டில் குறிப்பிட்ட அளவில் உயர்த்தியிருப்பது மக்களின் சுமைகளைக் குறைக்க வகை செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
குடும்பங்களுக்கான உதவித் தொகை 300 வெள்ளியிலிருந்து 500 வெள்ளியாக (66%) இவ்வாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட உதவி தொகை 8.2 மில்லியன் பேருக்கு இன்று தொடங்கி வழங்கப்படும்.
“பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு முதன்மை பிரச்சனையாக இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்” என்றார்.
மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதை மடானி அரசு தனது இலக்காகக் கொண்டுள்ளது.
மடானி பொருளாதார கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் சமத்துவம் மற்றும் சமூக நீதியில் நாட்டின் நிலைத்தன்மை அடங்கியுள்ளது.
அந்த வகையில் முதல் கட்ட எஸ்.டி.ஆர். தொகையைப் பெறுபவர்கள் அதை நன்முறையில் பயன்படுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று தமது முகநூல் பதிவில் நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
-பெர்னாமா




