டிஜிட்டல் தொழில்நுட்ப மிளகாய் தோட்டத்திற்கு அமைச்சர் கோபிந்த் சிங் வருகை!

57

கிள்ளான், பிப்.6-

கிள்ளானில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிளகாய் பயிரிடும் முறை குறித்து நேரில் காண்பதற்காக அத்தோட்டத்திற்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் நேரடியாக வருகை மேற்கொண்டார்.

இத்திட்டம் மலேசிய டிஜிட்டல் ஊக்குவிப்பு திட்டத்தின் (பெமாங்கின்) ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய வர்த்தகங்களை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் மலேசிய டிஜிட்டல் பொருளாதார நிறுவனத்தால் (எம்டெக்) இயக்கப்படுகிறது.

விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட எம்டெக், விவசாயத் துறைக்கான தேசிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாயிலாக கடந்த 2022 நவம்பர் முதல் 500க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கியுள்ளது.

இதில் 28,000 அக்டெக் (AgTech) பங்கேற்பாளர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு ஓர் அறுவடைக்கு 2,000 கிலோவுக்கும் மேல் உற்பத்தித் திறன் அதிகரிப்பு, ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு 2,000 வெள்ளிக்கு மேல் கூடுதல் மாத வருமானம் மற்றும் ஒரு ஏக்கருக்கு அறுவடைக்கு 3,000 வெள்ளிக்கு மேல் இயக்கச் செலவு குறைப்பு இதில் அடங்கும்.

விவசாயத் தொழிலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

அக்ரோ பேங்க் (Agrobank) நிதியுதவி ஆதரவுடன் இணைந்து, நுண் நிதியளிப்பு விண்ணப்பங்களை அணுகுவதற்கும் செயலாக்குவதற்கும் உதவுவதுடன், விவசாயத் துறையின் வாய்ப்புகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.