புதிய இலாகா, புதிய பாடத் திட்டங்களை அமைச்சு ஆராயும்! -டத்தோஸ்ரீ ஸம்ரி

46

கோலாலம்பூர், பிப்.6-

நடப்பு தொழில்துறை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு புதிய இலாகா, புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்துவது குறித்து உயர்கல்வி அமைச்சு ஆராயும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

திறன்பெற்ற உள்நாட்டுத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் அவர்கள் பயிலும் துறை பொருத்தமற்றதாக மற்றும் தொழில் சந்தையை பூர்த்திச் செய்யாத வகையிலும் இருப்பதாகும்.

தொற்றுக்கு பிந்தைய தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சியைக் கண்டு வருவதால் கல்வி துறையும் வேகமாக முன்நோக்கிச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

“இன்றைய கல்வி உலகின் சாத்திய கூறுகளிலிருந்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்றார்.

உதாரணத்திற்கு மலேசியாவிற்கு வரும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 5,000 பேர் மட்டுமே இருந்தாலும் கூட அவர்களிடமிருந்து மின்சாரம் மற்றும் மின்னியல் துறைகளில் பெரிய சாத்தியம் உள்ளது.

இதன் மூலம் இதர நடைமுறைகளையும் விட்டு விடுவதாக பொருள்படாது. மாறாக, இன்றைய உலகம் மற்றும் நாட்டின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அந்நிய தூதர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் மேலவை உறுப்பினருமான ஸம்ரி பேசினார்.

-அஸ்ட்ரோ அவானி