கூட்டுறவு கழக உறுப்பினர்களுக்கு பயிற்சியளிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்! -‘இக்மா’வுக்கு டத்தோ ஆர்.ரமணன் வேண்டுகோள்

59

பெட்டாலிங் ஜெயா, பிப்.9-

தனது உறுப்பினர்களுக்கு நிர்வாக ரீதியிலான பயிற்சிகளை வழங்குவதைத் தீவிரப்படுத்தும்படி மலேசிய கூட்டுறவு கழகத்தைத் (இக்மா) தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் கூட்டுறவு கழகங்கள் சிறப்பாகச் செயல்படுவதற்குப் போட்டியாற்றல் மற்றும் சரியான திட்டமிடல் அவசியம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

  “மலேசிய மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர் நாடு முழுவதும் உள்ள 7.34 லட்சம் கூட்டுறவு கழக உறுப்பினர்கள் ஆவர். இவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நிலைப்பாட்டை கூட்டுறவு கழகம் கொண்டிருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

  “மலேசியாவில் தற்போது ஏறக்குறைய 15,000 கூட்டுறவு கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றின் நிர்வாகம் மற்றும் வர்த்தகத்திற்கு எது முக்கியம் என்பது குறித்துப் பயிற்சியளிப்பதில் இக்மா மிக முக்கியப் பங்காற்ற வேண்டும்” என்று மடானியின் கூட்டுறவு சமூகமயமாக்கல் திட்டம் 2024ஐ அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்த பின்னர் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் செய்தியாளர்களிடம் பேசினார்.    

-பெர்னாமா