பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரின் சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

72

கோலாலம்பூர், பிப் 9-

சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியர்களுக்கு, குறிப்பாக சீன நண்பர்களுக்கு இனியப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மனிதவள அமைச்சருமான வ.சிவகுமார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தப் புதிய ஆண்டின் துவக்கம், ஒற்றுமையை ஊக்குவித்து, மலேசியர்களுக்கு செழிப்பு மற்றும் தொடர்ச்சியான மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்”.

மலேசியர்கள் சகோதரத்துவத்தை தொடர்ந்து கடைப்பிடித்து ஒற்றுமையை பேணும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.