spot_img
9.2 C
London
spot_img
Home சமூகம் மருத்துவ பயனீட்டு சாதன துறை வழி நாட்டிற்கு வெ.2,000 கோடி வருமானம்!

மருத்துவ பயனீட்டு சாதன துறை வழி நாட்டிற்கு வெ.2,000 கோடி வருமானம்!

0
271

புத்ராஜெயா, பிப்.15-

நாட்டின் பொருளாதாரத்திற்கு மருத்துவ பயனீட்டு சாதன துறை இவ்வாண்டு 2,000 கோடி வெள்ளி வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது.

இதில் உள்நாட்டு மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளும் அடங்கும் என்று  மருத்துவ பயனீட்டு சாதன ஆணையத்தின் (எம்.டி.ஏ.) தலைமைச் செயல்முறை அதிகாரி டாக்டர் பி.முரளிதரன் தெரிவித்தார்.

இதற்கு நாட்டில் செக்கோஸ்லோவாக்கியா, சீனா உட்பட சில வெளிநாடுகள் தங்களின் வர்த்தக் நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டதன் வழி தெளிவாகக் காண முடிகிறது.

இதன் அடிப்படையில் இவ்வாண்டு 2,000 கோடி வெள்ளி வரையிலான வருமானத்தை ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த  ஆசியான் அனைத்துலக மருத்துவ தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் முரளிதரன் பேசினார்.

-பெரித்தா ஹாரியான்