கோலாலம்பூர், பிப்.26-
.2024 ‘சாப் கோ மே’ கொண்டாட்டத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வளமிக்க கோலாலம்பூர் மெது ஓட்டத்தை கோலாலம்பூர் மேயர் டத்தோ கமாருல்சாமான் மாட் சாலே அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட வளமிக்க கோலாலம்பூர் மெது ஓட்டத்தின் தொடக்க விழா இங்குள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் ஆடல், பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமான வகையில் அரங்கேற்றம் கண்டது.
இந்நிகழ்ச்சியில் கோலாலம்பூர் மாநகர் மன்ற (டிபிகேஎல்)ஆலோசனை வாரிய குழு உறுப்பினர்கள் லாய் சென் ஹெங், கார்மன் லியோங் ஆகிய இருவரோடு டிபிகேஎல் ம்ற்றும் இதர அமைப்புகளின் உயர்நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இடையில் கன மழை பெய்தபோதிலும் சற்று இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. உள்நாட்டினரோடு வெளிநாட்டினரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதோடு பல உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தனர்.
ம்லேசியாவின் பல்லின மக்களின் கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடப்பு மடானி அரசாங்கத்தின் ஒற்றுமை கொள்கைக்கு ஏற்ப அமைந்திருந்தன.

புக்கிட் பிந்தாங் சமூக குழு (என்பிபிசி) பிபிகேஎல்சிசி சுற்றுலா சங்கத்துடன் இணைந்து இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இதன் ஏற்பாட்டு குழு தலைவரான ஜேக் லிம் கூறினார்.
” டாத்தாரான் மெர்டேக்காவில் தொடங்கி பாசார் செனி, ரிவர் ஆஃப் லைஃப், ஜிஎம்பிபி சமூக விற்பனை பேரங்காடி மையம், பெடரல் ஹோட்டல், லோட் 10, லாவ் யாட் பிளாசா, சுங்கை வாங் பிளாசா, பெர்ஜாயா டைம்ஸ் ஸ்குவே போன்ற இடங்களைக் கடந்து லாலாபோர்ட்டில் ஒரு நிறைவைக் கண்டது” என்றார்.
நாக மற்றும் சிங்க நடனங்களோடு சீன பாரம்பரிய படைப்புகளோடு கண்கவர் ஆடைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் பங்கேற்பாளர்களை மகிழ்வித்தன.
கோலாலம்பூர் மாநகர் மன்றம், எம்பிபி புக்கிட் பிந்தாங், ருக்குன் தெதாங்கா, பிபிகேஎல்சிசி, ஃபாரென்ஹெய்ட் 88, லோட் 10, பெவிலியன் கேஎல், லாவ் யாட் பிளாசா, சுங்கை வாங் பிளாசா , சூரியா கே எல் சி சி, பெர்ஜாயா டைம்ஸ் ஸ்குவே, லாலா போர்ட் போன்ற நிறுவனங்களும் இந்த மெது ஓட்டத்திற்கு ஆதரவு வழங்கியதாக பிபிகேஎல்சிசி சுற்றுலா சங்கத் தலைவரும் வளமிக்க கோலாலம்பூர் மெது ஓட்ட கூட்டு ஏற்பாட்டு குழு தலைவருமான எங் யே சென் விவரித்தார்,




