spot_img
9.7 C
London
spot_img
Home கலை உலகம் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் கற்பனைக் காதல் தொடர் ‘மிஸ் ராசாத்தி’ & நாடகத் தொடர்...

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் கற்பனைக் காதல் தொடர் ‘மிஸ் ராசாத்தி’ & நாடகத் தொடர் ‘மங்கை நீ’

0
334

கோலாலம்பூர், பிப். 26, –

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கற்பனைக் காதல் தொடர் மிஸ் ராசாத்தி மற்றும் நாடகத் தொடர் மங்கை நீ ஆகிய இரண்டு உள்ளூர் தமிழ் தொடர்களின் முதல் ஒளிபரப்பு தேதிகளை ஆஸ்ட்ரோ இன்று அறிவித்தது

பிரபல உள்ளூர் இயக்குநரும் நடிகருமான மார்ட்டின் ஆர். சந்தேரன் இயக்கிய இந்த விண்மீன் பிரத்தியேகத் தொடரான மிஸ் ராசாத்தி, சாந்தினி சந்திர போஸ், ரவின் ராவ், இர்பான் ஜைனி மற்றும் பலக் குறிப்பிடத்தக்க உள்ளூர் திறமைகளைத் தாங்கி மலர்கிறது. மிகுந்த மன அழுத்தத்தால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்யும் மீரா ராசையாவை இந்தக் கற்பனைக் காதல் தொடர் மையமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், பிரபஞ்சத்திலிருந்து வந்தவர் எனத் தன்னை அறிமுகப்படுத்தும் ராமால் அவளின் தவறான முடிவு நிறுத்தப்படவே விஷயங்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கை, துரோகம் மற்றும் அவளதுச் செயல்களின் விளைவுகள் பற்றிய தீவிரமான கலந்துரையாடல்கள் மீராவிற்கும் ராமிற்கும் இடையே மலர்ந்த பிணைப்பை மேலும் ஆழமாக்குகின்றது.

வேறொரு உலகத்திலிருந்து வரும் கூலிப்படையை எதிர்கொள்ள இருவரும் கைகோர்ப்பதோடு பிரபஞ்சங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர் – மீரா மற்றும் ராம் இருவரும் தங்கள் முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா இல்லையா என்பதே கதையின் முக்கிய அம்சமாகும். ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்பு காணும் புதிய அத்தியாயங்களுடன் மிஸ் ராசாத்தி பிப்ரவரி 26 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணுகிறது.

புகழ்பெற்ற உள்ளூர் திறமையான யுவராஜ் கிருஷ்ணசாமி இயக்கிய மற்றும் பிரபல உள்ளூர் கலைஞர், டத்தின் ஸ்ரீ ஷைலா தயாரித்த, மங்கை நீ தொடர் வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்ட பல்வேறு தரப்பு பெண்களைப் பாதிக்கும் நிகழ்வுகளின் வரிசையைச் சித்தரிக்கின்றது. தங்களின் அபார வலிமை மற்றும் தைரியத்தின் மூலம் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக தங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், சவால்களைத் தழுவி வெற்றிகளைக் கொண்டாடும் பெண்களின் திறனை இந்த ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட உள்ளூர் தமிழ் நாடகத் தொடர் எடுத்துக்காட்டுகிறது. உறவே அழகே எனும் முதல் அத்தியாயத்தில் ஷாமினி ஷ்ரதா, கிஷோக் மற்றும் யுவனா போன்ற சிறந்த உள்ளூர் திறமைகள் இடம்பெற்றுள்ளனர், யுதம் எனும் இரண்டாவது அத்தியாயத்தில் டிஷாலெனி ஜாக், தேவகுரு மற்றும் ஆமு திருஞானம் ஆகியோர் நடித்துள்ளனர். அவளல் எனும் மூன்றாம் அத்தியாயத்தில் கபில் கணேசன், ஜெய்ஸ்ரீ, வனேசா டி’குரூஸ் மற்றும் ஆரோ சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர், அதைத் தொடர்ந்து நம்பிக்கை எனும் நான்காம் அத்தியாயம் தினாஷினி, சாந்தினி சந்திர போஸ் மற்றும் டேவிட் ஆண்டனி ஆகியோரைத் தாங்கி மலர்கின்றது. உன்னாலே எனும் இறுதி அத்தியாயத்தில் நித்யாஸ்ரீ, கோவின் சிங், தியா லக்ஷனா மற்றும் காயத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு வெள்ளி முதல் ஒளிபரப்புக் காணும் புதிய அத்தியாயங்களுடன் மங்கை நீ மார்ச் 8 இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணுகிறது.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.