Homeவிளையாட்டுஅர்செனல் அணியில் 100 ஆவது கோலைப் போட்டார் ஜீரோட்!

அர்செனல் அணியில் 100 ஆவது கோலைப் போட்டார் ஜீரோட்!

பாரிஸ், செப்.29 –

யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் எச் பிரிவுக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தின் அர்செனல் 4 – 2 என்ற கோல்களில் பெலரசின் பேட் பொரிசோவ் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் அர்செனல் தாக்குதல் ஆட்டக்காரர் ஒலிவர் ஜீரோட் தனது 100 ஆவது கோலைப் பதிவு செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியின் இதர இரண்டு கோல்களை தியோ வோல்கோட் போட்ட வேளையில் மற்றொரு கோலை ரோப் ஹோல்டிங் அடித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற எச் பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் அர்செனல் 3 – 1 என்ற கோல்களில் ஜெர்மனியின் கொலேக்னே அணியை வீழ்த்தியது. வியாழக்கிழமை நடைபெற்ற எச் பிரிவுக்கான ஆட்டத்தில் கொலேக்னே 0 – 1 என்ற கோலில் பெல்ஜியமின் ரெட் ஸ்டார் பெல்கிரேட் அணியிடம் வீழ்ந்தது.

இதன் வழி எச் பிரிவில் அர்செனல் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் வெஸ்ட் புரோம்விச் அல்பியோன் அணிக்கு எதிராக விளையாடிய அணியைக் காட்டிலும் பேட் பொரிசோவ் அணிக்கு எதிராக நிர்வாகி ஆர்சன் வெங்கர் 9 மாற்றங்களை செய்திருந்தார்.

ஸ்கோட்ரான் முஸ்தாபி, முஹம்ட் எல்னி மட்டுமே தங்களின் இடங்களை தக்க வைத்து கொண்ட நிலையில் ஆர்சன் வெங்கர் அதிகமான இளம் ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தார்.

spot_img

latest articles

explore more