Homeமலேசியாசிறை செல்கிறார் தியான் சுவா!

சிறை செல்கிறார் தியான் சுவா!

கோலாலம்பூர், செப்.29 – 

பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரும் , பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான தியான் சுவா, இன்று மேல் முறையீடு நீதிமன்றத்தில்,    காவல்துறை மீதான தமது  வழக்கில் மேல் முறையீட்டைத் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார். தியான் சுவாவின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ள வேளையில் சிறைச் செல்ல தயார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 3  பேரணியில் பங்கேற்ற தியான் சுவா ,  போலீஸ் படை பயிற்சி மையத்தின் ( பூலாபோல் )  வளாகத்திலிருந்து  கலைந்து செல்லுமாறு,  போலீஸ் விடுத்த உத்தரவை மீறிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுக் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அப்போது கோலாலம்பூர்  செஷன்  நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 1,000 ரிங்கிட் அபராதமும் விதித்தது.

அந்தத் தண்டனையை எதிர்த்து தியான் சுவா, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டான் ஸ்ரீ மொக்தாருடீன் பாக்கி தலைமையில் மூவர் அடங்கிய குழுவின் முன்னிலையில் விசாரணை நடைபெற்ற வேளையில் தியான் சுவா தமது வழக்கறிஞர் என். சுரேந்திரனை விடுவித்து தம்முடைய அறிக்கையை வாசித்தார்.

கோலாலம்பூர் செஷன் நீதிமன்றம் தமக்கு விதித்த தண்டனை அறிவுக்கு ஒவ்வாத ஒன்று என தியான் சுவா தமது அறிக்கையில் தெரிவித்தார். பூலோபோலுக்கு தம்மை வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்து சென்ற வேளையில் தாம் அந்த இடத்தை சட்ட விரோதமாக ஊடுருவியதாக குற்றஞ்சாட்டிருப்பது ஏற்ற கொள்ள முடியாது ஒன்று என அவர் சொன்னார்.

தியான் சுவா தமது மேல் முறையீட்டை திரும்ப பெற்று கொண்டதை அடுத்து அவருக்கும் விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டை நிலைநிறுத்தப்படுவதாக நீதிபதி மொக்தாருடீன் தீர்ப்பு வழங்கினார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 1 ஒரு வருட சிறைத் தண்டனை பெற்றால், அவர் இயல்பாகவே தனது நாடாளுமன்றப் பதவியை இழப்பார் என்றும் மீண்டும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் மலேசியச் சட்டங்கள் தெரிவிக்கின்றன

 

spot_img

latest articles

explore more