Homeகலை உலகம்மெர்சலுடன் மோதும் கொடி வீரன் ?

மெர்சலுடன் மோதும் கொடி வீரன் ?

சென்னை, செப்.29 –

குட்டி புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொடிவீரன்’ படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

‘கொடிவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் ஆயுதபூஜை வெளியீடாக இருந்த நிலையில். பல்வேறு படங்கள் வெளியாவதால், தங்களது வெளியீட்டை தள்ளிவைத்தது.

தற்போது 5 நாள் விடுமுறை என்பதால், தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டுவரலாம் என்று ‘கொடி வீரன்’ படக்குழு முடிவு செய்திருக்கிறது. விரைவில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு, படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா, விதார்த், பால சரவணன், பூர்ணா மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

spot_img

latest articles

explore more