spot_img
8.1 C
London
spot_img
Home மலேசியா கல்வி கல்வி வாயிலாக இந்தியர்களின் மேன்மைக்கு வித்திட்டவர் அமரர் துன் சாமிவேலு! -பிரதமர் அன்வார் புகழாரம்

கல்வி வாயிலாக இந்தியர்களின் மேன்மைக்கு வித்திட்டவர் அமரர் துன் சாமிவேலு! -பிரதமர் அன்வார் புகழாரம்

0
298

உலு சிலாங்கூர், ஏப்.27-

இந்நாட்டில் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குக் கல்வி ஒன்றே பிரதானம் என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு பல இந்திய மாணவர்களைப் பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமை அமரர் துன் சாமிவேலுவையே சாரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டினார்.

இவர் விட்டுச் சென்ற பணியை தற்போதைய ம.இ.கா. தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது என்று இங்குள்ள மாநாட்டு மண்டபத்தில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உபகார சம்பளம் மற்றும் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் அவர் குறிப்பிட்டார்.

“நான் இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள், கடாசான், ஈபானியர்கள் என அனைத்து சமூக மக்களுக்கான பிரதமர். ஒவ்வோர் இன மாணவர்களுக்குத் தேவையான கடனுதவி மற்றும் இதர வசதிகளைச் செய்து கொடுப்பது எனது கடமையாகும். அவ்வகையில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்காக 25 மில்லியன் வெள்ளி நிதியுதவியை அரசாங்கம் இவ்வாண்டு வழங்கியுள்ளது” என்றார்.

“இந்தியர்களின் பிரச்னைகள் யாவை என்பதை என்னிடம் நேரடியாக விவாதித்து அவற்றுக்குத் தீர்வு காணும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் பாணியை நான் மதிக்கின்றேன் ” என்றார் பிரதமர்.

“சில தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார்கள். மேலும் சிலரோ அரசாங்கத்தை எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். சமூக வலைத் தளங்களிலும் இதைப் பற்றியே இவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்” என்றார்.

இந்நிலையில், தனது சமூக மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் முயற்சிக்கு அரசாங்கம் தோள் கொடுக்கும் என்றார்.

அவ்வகையில் திவெட் கல்வியை அடிப்படையாகக் கொண்ட டேஃப் கல்லூரிக்கு அரசாங்கம் 2 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கும் என்றும் அன்வார் கூறினார்.

தங்கள் சமூக மக்களின் மேன்மைக்காக உதவ பிகேஆர், மஇகா மற்றும் ஜசெக தலைவர்கள் பேச்சு நடத்துகின்றனர். இதுவே சிறந்த முறை. ஒரு குழுவாக ஒற்றுமையோடு செயல்பட்டு நாட்டையும் மக்களையும் மேன்மையுறச் செய்வோம் என்றார் பிரதமர்.