கோலாலம்பூர், ஏப்.29-
விரைவில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் ம.இ.கா. தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ம.இ.கா. சிப்பாங் தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் கோபிராஜன், துணைத் தலைவர் பி.குணசீலன், மகளிர் பிரிவு தலைவி எஸ்.சரஸ்வதி, துணைத் தலைவி எம்.கவிதா, புத்ரா தலைவர் லிங்கேஸ், துணைத் தலைவர் ரூபேந்திரன், புத்ரி தலைவி எஸ்.மோகனேஸ்வரி, துணைத் தலைவி ஜி.சுஜித்ரா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவருக்கும் ம.இ.கா. சிப்பாங் தொகுதித் தலைவர் டத்தோ வீ.குணாளன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.





