spot_img
13 C
London
spot_img
Home சமூகம் 245 குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டித் தர சிலாங்கூர் & மத்திய அரசு ஒப்புதல் -ஙா கோர்...

245 குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டித் தர சிலாங்கூர் & மத்திய அரசு ஒப்புதல் -ஙா கோர் மிங்

0
322

கோல சிலாங்கூர், மே 6-

மேரி தோட்டம், நைகல் கார்ட்னர் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம், மிஞ்ஞாக் தோட்டம் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த 245 குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்கு சிலாங்கூர் அரசு மத்திய அரசும் இணைந்து ஒப்புதல் அளித்துள்ளதாக வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

இந்த வீடமைப்புத் திட்டம் அமைச்சு, மாநில அரசு மற்றும் பெர்ஜாயா காப்பரேஷன் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

இதற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் 75 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ள வேளையில், வீடுகளை நிர்மாணிக்க 20 ஏக்கர் நிலத்தை பெர்ஜாயா நிறுவனம் இலவசமாக வழங்கியிருப்பதாக அவர் சொன்னார்.

“அதனால் இந்த வீடுகள் நிர்மாணிப்புப் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற பின்னர் வீடுகள் 24 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று கோல சிலாங்கூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங் குறிப்பிட்டார். 

-மலேசியா கினி