கிரிஷ் இசை நிகழ்ச்சி: குரல் தேர்வில் கலந்து கொள்ள உள்ளூர் கலைஞர்கள் வரவேற்கப்படுகின்றனர்

71

கோலாலம்பூர், மே 6-

கலைத் துறையில் பீடு நடை போட விரும்பும் இளம் பாடகர்களுக்கு தலைநகரில் நடைபெறவிருக்கும் ‘கிரிஷ் லைஃப் ஷோ’ நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை வழங்கக் காத்திருக்கிறது.

திறந்த முறையில் நடைபெறவிருக்கும் இந்தக் குரல் தேர்வில் பங்கு பெறுவதன் மூலம் அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்தக் குரல் தேர்வில் கலந்து கொள்ள வயது வரம்பு ஏதும் விதிக்கப்படவில்லை.

வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் உங்களின் திறமையை வெளிப்படுத்தி மறக்க முடியாத ஓர் அனுபவத்தைப் பெறலாம்.

பாடகர்களாக விரும்புவோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான பதிவு மற்றும் மேல் விவரங்களுக்கு 019-9395656, 019-6635656 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.