உலு சிலாங்கூர், மே 9-
கோல குபு பாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் பாங் சோக் தாவோவிற்கு இந்திய வாக்காளர்கள் முழு ஆதரவு வழங்குவர் என்று பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்திய சமூகத்தினரை இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்று சில தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு வாக்காளர் கள் கட்டுப்படமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்” என்றார்.
தங்களின் எதிர்காலம் மற்றும் நல்வாழ்விற்காக வரும் சனிக்கிழமை விவேகத்துடன் வாக்களித்து ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரைத் தேர்வு செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கோல குபு பாரு இந்திய தலைவர்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது உள்துறை அமைச்சருமான சைஃபுடின் குறிப்பிட்டார்.
-மலேசியா கினி





