spot_img
12.6 C
London
spot_img
Home சமூகம் இந்தியர்களின் விவகாரத்திற்கு தீர்வு தேவை! -சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

இந்தியர்களின் விவகாரத்திற்கு தீர்வு தேவை! -சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

0
271

உலு சிலாங்கூர், மே 10-

சிலாங்கூர் மாநில இந்திய சமூகத்தினர் விவகாரம் தொடர்பில் மந்திரி புசாரின் உதவியாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்மை ஏமாற்றுக்காரன் என்று சித்தரித்த அந்த உதவியாளரை முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கடுமையாகச் சாடினார்.

இம்மாநில இந்தியர்களுக்குத் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தீர்வு வேண்டுமே தவிர வெற்று வாக்குறுதிகள் அல்ல.

பொதுவாக ஒரு விவகாரத்தைத் தெளிவற்ற முறையில் கூறி ஒருவரை ஏமாற்றுவது சுலபம். இதில் மிகவும் எளிதானது எழுப்பப்படும் ஒரு விவகாரத்தைத் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளிப்பதாகும்.

“இப்பிரச்சனை பல தசாப்தங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு காணப்பட்டது என்ற உண்மையை என்னிடம் கூறுங்கள்” என்று செய்தியாளர்களிடம் பேசிய போது ஸ்பான் தலைவருமான சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

-மலேசியா கினி