உலு சிலாங்கூர், மே 11-
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வாக்களிக்கச் சென்றவர்களின் விகிதம் மாலை 4.00 மணி வரை 55.79 விழுக்காட்டைப் பதிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மழையினூடே 17 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பு நடவடிக்கை மாலை 6.00 மணி வரை நடைபெற்றது.
இந்நிலையில் 40 வாக்காளர்களைக் கொண்ட புக்கிட் பிரேசர் சீனப்பள்ளியில் வாக்களிப்பு மையம் பிற்பகல் 2.00 மணிக்கு மூடப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த கோல குபு பாரு இடைத்தேர்தலில் பாங் சோக் தாவோ (பக்காத்தான்), கைருல் அஸாரி (பெரிக்காத்தான்), ஹாஃபிஸா ஸைனுடின் (மலேசிய இந்திய மக்கள் கட்சி) ஞாவ் கீ ஸின் (சுயேட்சை) ஆகியோரிடையே 4 முனை போட்டி நிலவுகிறது.
-பெர்னாமா





