spot_img
14.6 C
London
spot_img
Home தேர்தல் வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு

0
290

கோல குபு பாரு, மே 11-

இன்று நடைபெற்ற கோல குபு பாரு இடைத்தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜ.செ.க சிலாங்கூர் மாநில துணைச் செயலாளருமான பாப்பாராய்டு வீரமான் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வாக்கு பதிவு ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.

நாட்டின் தேர்தல் சரித்திரத்தில் இதுவே முதல் முறை என தமது மகிழ்ச்சியினை அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும் இன்று நடைபெற்ற வாக்களிப்பில் பூர்வகுடியினர் திரண்டு வந்தது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று என்றார்.

இம்முறை கிடைத்த தேர்தல் முடிவு எதிர் தரப்பினர் இதுவரை மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் மீது சுமத்திய அவதூறான கூற்றுகளுக்கு ஒரு மிகச் சிறந்த பதிலடியாக கோலா குபு பாரு மக்கள் நிரூபித்திருப்பதை கண்டு மனம் நெகிழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

சவால்களுக்கு மத்தியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளான பி.கே.ஆர், அமானா, அம்னோ, ம.இ.கா, ஐ.பி.எப் மற்றும் மைபிபிபி தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு சாரா இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து 2 வாரங்களாகக் களமிறங்கி வாக்கு வேட்டையில் வேட்பாளருடன் கை கோர்த்து இன்றைய வெற்றிக்கு கடினமாக உழைத்ததை நினைவுகூர்ந்து அவர் நன்றி கூறினார்.

இந்த இடைத்தேர்தல் முடிவு மக்கள் அரசாங்கத்தின் மீதும் நம் பிரதமர் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

வெற்றி பெற்ற ஆளும் கட்சி வேட்பாளர் பாங் சொக் தாவ் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மக்களின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த சிறப்பான முறையில் சேவையாற்றுவார் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.