காஜாங், மே 14-
உலக முழுவதும் நேற்று முன்தினம் அன்னையர் தினம் மிக விமரிசையாகக்0 கொண்டாடப்பட்டது.
அன்னை தனது பிள்ளைகள் மீதும் தனது குடும்பத்தின் மீதும் அள்ளித் தரும் அளவிட முடியாத அன்பை, அவா்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் அவா்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும்.
அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. அந்த வகையில் அன்னையரின் தியாகத்தை போற்றும் வகையில் நாடறிந்த கலைஞர் எம். ஜே. விஜய் பாடிய அன்னையர் பாடல்கள் நேற்று யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
ஏ.எம்.ஸெட். புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் எமிகோஸ் அப்பு எழுதி எமிகோஸ் சுகுவின் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளன.

சிலாங்கூர் மாநில மைபிபிபி இடைக்கால தலைவரும் உலு லங்காட் மைபிபிபி தொகுதித் தலைவருமான டாக்டர் சுரேந்திரன் தலைமையில் இந்தப் பாடல்கள் யூ-டியூப் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இப்பாடல்களின் வெளியீட்டையொட்டி டாக்டர் சுரேந்திரன் தலைமையில் 50 தாய்மார்களுக்கு விருந்து நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு சேலைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மைபிபிபி பாங்கி தொகுதித் தலைவர் குமாரும் கலந்து கொண்டார்.