மடானி டிஜிட்டல் மானியம்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி குறு, சிறு & நடுத்தர தொழில்துறையினருக்கு அழைப்பு

226

கோலாலம்பூர், மே 19-

குறு, சிறு & நடுத்தர தொழிற்துறையினர் மடானி டிஜிட்டல் மானியம் பெற்று தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இந்நடவடிக்கையானது பேங்க் சிம்பானான் நேஷனல்(பிஎஸ்என்) , மலேசிய டிஜிட்டல் இகோனோமி கார்பரேஷன்(எம்டேக்) மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

குறு, சிறு & நடுத்தர தொழிற்துறையினர் தங்களின் தினசரி வர்த்தக நடவடிக்கைகளில் டிஜிட்டல் முறையை மேம்படுத்துவதற்கு இந்த மானியம் உறுதுணை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நோக்கத்திற்காக 2023 மடானி பட்ஜெட்டில் 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியுடைய வர்த்தகர்கள் 50% அல்லது 5,000 வெள்ளி வரையிலான மானியம் பெறலாம்.

பொருந்தும் மானியம் என்றால் என்ன?

தகுதி பெற்ற குறு, சிறு & நடுத்தர வர்த்தகர் /கூட்டுறவு தொழிற்துறை விலைப் பட்டியலில் இருந்து 50% அல்லது 5,000 வெள்ளி வரை மானியம் பெறலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை விநியோகிப்பாளரின் விலைப்பட்டியல் 10,000.00 வெள்ளியாக இருந்தால் (கூடுதல்பட்ச தொகை) இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு & நடுத்தர வர்த்தகர்கள் /கூட்டுறவு தொழிற்துறையினர் 5,000.00 வெள்ளி மானியம் பெறுவர்.

அதே வேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை விநியோகிப்பாளரின் விலைப்பட்டியல் 10,000.00 வெள்ளிக்குக் குறைவாக இருந்தால் குறு, சிறு & நடுத்தர வர்த்தகர்கள் /கூட்டுறவு தொழிற்துறையினர் விலைப்பட்டியலில் இருந்து 50% மானியம் பெறுவர்

தங்களின் விலைப் பட்டியல் 10,000.00 வெள்ளியைத் தாண்டுமேயானால் 5,000.00 வெள்ளி கூடுதல்பட்ச மானியத்தைக் கருத்தில் கொண்டு குறு, சிறு & நடுத்தர வர்த்தகர்கள் /கூட்டுறவு தொழிற்துறையினர் பாக்கி தொகையைச் செலுத்த வேண்டும்.

கீழ்காணும் சேவைகளுக்கு மானியம் வழங்கப்படும்:

மடானி டிஜிட்டல் மானியம் பெற விரைவில் தங்களைப் பதிந்து கொள்ளும்படி
குறு, சிறு & நடுத்தர வர்த்தகர்கள் /கூட்டுறவு தொழிற்துறையினர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதற்கு https://forms.gle/zcR7rAHgrXSWYr8y6
வழி விண்ணப்பம் செய்யலாம்.

மேல் விவரங்களுக்கு “JSOFT SOLUTION SDN BHD” கிரீஷ் :03-74956282.