ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் உள்ளூர் காதல் நகைச்சுவைத் தொடர் ‘வெட்டிங் கலாட்டா’

81

கோலாலம்பூர், மே 20-

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் கோ ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணும் புதுமுக உள்ளூர் இயக்குநர் சரண் சட் இயக்கிய ‘வெட்டிங் கலாட்டா’ எனும் உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவைத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இன்று இரவு 9.00 மணிக்குக் கண்டு மகிழலாம்.

ஒரே தேதி மற்றும் இடத்தில் தங்கள் சபதங்களைப் பரிமாறிக் கொள்வதோடு திருமண பந்தத்தில் இணைய தயாராகும் மூன்று ஜோடிகளின் வாழ்க்கையை இந்த விண்மீன் பிரத்தியேகத் தொடர் சித்தரிக்கிறது.

கல்லூரி வாழ்க்கையிலிருந்து தொழிலில் காலடி எடுத்து வைத்து அதைத் தழுவ முயற்சிக்கும் வேளையில், ஹீராவின் குடும்ப அழுத்தத்தின் காரணமாக நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கள் திருமணத் திட்டங்களைத் தொடங்க அஸ்வினும் ஹீராவும் முடிவு செய்கிறார்கள். இதற்கிடையில், பல முயற்சிகளுக்கு மத்தியில் இருவருக்குமிடையில் காதலை உணரா விட்டாலும் ஜீவாவும் பிரியாவும் அதைப் பொருட்படுத்தாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.

மறுபக்கம், தனது முன்னாள் மனைவி வாழ்வில் முன்னேறியதை அறிந்தவுடன் விவாகரத்துப் பெற்ற பிரகாஷ், மேக்னாவைத் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார். இந்த ஜோடிகள் திருமணம் செய்து அவர்களின் உண்மையான காதலைக் கண்டுபிடிப்பார்களா அல்லது விதி வேறு திட்டங்களை அவர்களுக்கு வைத்திருக்கிறதா என்பதே இச்சுவாரஸ்சியமான காதல் நகைச்சுவைத் தொடரின் கதைக்களம். அதனை அறிய, ஜேம்ஸ் தேவன், தாஷா, ஆல்வின் மார்ட்டின், விக்கி ராவ், பவித்ரா ரெட்டி, லிஷாலினி, கஜேந்திரன், தேவகன்னி மற்றும் பலர் உட்பட புகழ்பெற்ற உள்ளூர் நடிகர்கள் வரிசையைக் கொண்டிருக்கும் அற்புதமான வெட்டிங் கலாட்டா தொடரை ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்பு காணும் வெட்டிங் கலாட்டா தொடரின் புதிய அத்தியாயங்களை இரவு 9.00 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் கோ ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.