கோலாலம்பூர், ஜூன் 22-
மஇகா தேசிய உதவி தலைவர் பதவிக்கு நால்வர் போட்டியிட விருப்பதாக கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் அறிவித்தார்.
டத்தோ டி. மோகன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன் ரெங்கநாதன் மற்றும் டத்தோ அசோஜன் ஆகியோரே அந்த நால்வர் என்று இங்குள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கு பின்னர் குறிப்பிட்டார்.