கோலாலம்பூர், ஜூன் 22-
மஇகா தேர்தல் பிரச்சாரத்தில் பணம், ஜாதி ஆகியவற்றிற்கு அறவே இடம் அளிக்கக் கூடாது என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் .ஏ. விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்
கட்சிக்காகப் பாடுபவர்களைப் பொறுப்பாளர்களாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தமது வேண்டுகோளுக்கு இணங்க கட்சியின் தேசிய துணைத் தலைவராக டத்தோஸ்ரீ சரவணனைத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
உதவி தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் கட்சியின் சட்ட விதிகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
இதனை மீறுவோருக்கு எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.





