புத்ராஜெயா, ஜூன் 26-
சிலாங்கூர் மாநிலத்தில் தனது சேவைகள் தொடரும் என்று இரண்டாவது முறையாக சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரம் குப்புசாமி தெரிவித்தார்.
கல்வி, வேலை வாய்ப்பு, சமூகம், பொருளாதாரம் என பல துறைகளில் இம்மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தனது அணியினர் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தன்னை மீண்டும் இரண்டாவது முறையாக சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவு தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவு வழங்கிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அரவிந்த் கிருஷ்ணன் ஆகியோருக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சுந்தரம் குறிப்பிட்டார்.