spot_img
10.1 C
London
spot_img
Home சமூகம் பங்சார் எ.அண்ணாமலை கவிதைகள் நூல் வெளியீடு!

பங்சார் எ.அண்ணாமலை கவிதைகள் நூல் வெளியீடு!

0
170

கோலாலம்பூர், ஜூன் 27-

நம் நாட்டில் நன்கு அறிமுகமான எழுத்தாளர், கவிஞர் செய்தியாளர் பங்சார் எ.அண்ணாமலையின் ‘அண்ணாமலை கவிதைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா ஜூலை மாதம் 2ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 7.00 மணிக்கு கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி ம.இ.கா.வின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தலைமையில் நடைபெறும்.

இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி நூலாசிரியர் பங்சார் அண்ணாமலை தமிழ் ஆர்வலர்களை அழைக்கின்றார்.